FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புயல்களுக்கு மனைவி, காதலிகள் பெயரைச் சூட்டி மகிழ்ந்த காலமும் உண்டாம்!

புயல்கள் உருவாகும்போது, அமெரிக்க ராணுவ வானிலை ஆய்வாளர்கள் தங்களது மனைவி, காதலிகள் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள் என்பது பற்றி..

52 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

கடலில் உருவாகும் புயலுக்கு அமெரிக்க ராணுவ வானிலை ஆய்வாளர்கள் தங்களது மனைவி மற்றும் காதலிகளின் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்த காலமும் இருந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயலுக்கு இதுவரை அர்னாப் என வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் ஒர்னாப் என உச்சரிக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. இதையடுத்து அர்னாப் புயல் அதி தீவிர புயலாக மாறியதோடு, ஒர்னாப் புயலாகவும் பெயர் மாறியிருக்கிறது.

புயல் உருவாகும் என்றதும் அதற்கு என்ன பெயர் என்று தற்போது தேடத் தொடங்கி விடுகிறோம். இந்த பெயர் எவ்வாறு வழங்கப்படுகிறது என்றெல்லாம் பலரும் அறிந்த தகவல்தான்.

Advertisement

Advertisement

ஆனால், இவ்வாறு அதிகாரப்பூர்வமாக புயல்களுக்கு பெயர்கள் சூட்டப்படுவதற்கு முன்பே, அதாவது இரண்டாம் உலகப் போரின்போது, ​​அமெரிக்க இராணுவத்தின் விமானப் படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த வானிலை ஆய்வாளர்கள், வீரர்களுக்கு புயல் சின்னங்கள் குறித்து முன்னெச்சரிக்கைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகினால், அவற்றை அடையாளம் காண அவர்களுக்குள் ஒரு பெயரை சூட்டி அதுபற்றி அறிவிக்கத் தொடங்கினர்.

அப்போது விளையாட்டாக, அமெரிக்க ராணுவ வானிலை ஆய்வாளர்கள், புதிய புயல்களுக்கு தங்கள் மனைவிகள் அல்லது தோழிகளின் பெயர்களை சூட்டி மகிழ்ந்துள்ளனர். (இந்த தகவல் அவர்களது மனைவிகளுக்குத் தெரிந்திருக்குமா என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.)

அதன் தொடர்ச்சியாகவே, 1953-ஆம் ஆண்டில், அமெரிக்க தேசிய வானிலை மையம், புயல்களுக்கு பெயர் சூட்டும் முறையை குறிப்பாக பெண்கள் பெயர்களைப் பயன்படுத்தும் முறையை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியது.

இது நாளடைவில் மாறி 1979-ஆம் ஆண்டில், உலக வானிலை அமைப்பு மற்றும் அமெரிக்க வானிலை மையம் இணைந்து புயல்களுக்கான பெயர் பட்டியலைத் தயாரித்த போது, பொதுப் பெயர்கள், ஆண்கள் பெயர்களையும் சேர்த்தனவாம்.

ஒட்டுமொத்தமாக உலகில் ஆறு மண்டல சிறப்பு வானிலை மையங்கள், ஐந்து மண்டல வெப்பமண்டலப் புயல் எச்சரிக்கை மையங்கள் செயல்படுகின்றன. இவை ஒன்பது கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்குப் பெயரிடுகின்றன. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்த மையங்களில் ஒன்று. இது வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள 13 நாடுகளுடன் அதாவது —இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் — நாடுகளுடன் இணைந்து புயல்களுக்குப் பெயர்களை பட்டியலிட்டு அகர வரிசைப்படி பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன.

summary

There was even a time when people took pleasure in naming storms after their wives or lovers!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments