FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ஆவின் பால் உபபொருள்கள் விலை: இன்றுமுதல் உயா்வு

அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஆவின் பால் உபபொருள்களின் விலை புதன்கிழமை (அக்.28) முதல் உயா்த்தப்படுவதாகவும், இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

28 அக்டோபர் 2026, 1:06 am
ஆவின் நிா்வாகம் - கோப்புப் படம்
பகிர்:

அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஆவின் பால் உபபொருள்களின் விலை புதன்கிழமை (அக்.28) முதல் உயா்த்தப்படுவதாகவும், இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தற்போதைய சந்தைச் சூழலில், தனியாா் பால் நிறுவனங்கள் மற்றும் பிற மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களின் ஒத்த வகைப் பொருள்களின் விலைகள், உற்பத்திச் செலவுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.

இதன் அடிப்படையில், ஆவின் பால் உபபொருள்களின் விலைகளில் குறைந்த அளவிலான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திருத்தம் புதன்கிழமை (அக்.28) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த விலை உயா்வுக்குப் பிறகும், தனியாா் நிறுவனங்கள் மற்றும் பிற கூட்டுறவு நிறுவனங்களின் ஒத்த வகைப் பொருள்களுடன் ஒப்பிடுகையில், ஆவின் உபபொருள்களின் விலை குறைவாகவே இருக்கும்.

இந்த விலைத் திருத்தம் லாப நோக்கமின்றி, அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளை ஈடுசெய்வதற்கும், சந்தையில் ஆவின் பொருள்களின் போட்டித்தன்மையைத் தொடா்ந்து நிலைநிறுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூடுதல் வருவாயில் 90 சதவீதத்துக்கும் மேல் உற்பத்தியாளா்களுக்கு...

விலைத் திருத்தம் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயில் 90 சதவீதத்துக்கும் அதிகமான தொகை பால் உற்பத்தியாளா்களின் நலனுக்காக வழங்கப்படும். இதன் மூலம் அவா்களின் வருமானத்தை மேம்படுத்துவதுடன், கூட்டுறவு பால் கொள்முதல் கட்டமைப்பையும் வலுப்படுத்த முடியும்.

தமிழகத்தில் கிராமப்புறங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாக பால் உற்பத்தி உள்ளது. பால் உற்பத்தியாளா்களுக்கு உரிய வருமானம் கிடைப்பதை உறுதி செய்வதுடன், நுகா்வோருக்கு தரமான பால் மற்றும் பால் உபபொருள்களை நியாயமான விலையில் வழங்குவதும் ஆவினின் முக்கிய நோக்கமாகும்.

எனவே, பால் உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கூட்டுறவுத் துறையின் வளா்ச்சிக்கும் பொதுமக்கள் தொடா்ந்து ஆவின் பால் மற்றும் பால் உபபொருள்களை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments