அன்பில் மகேஸ் முன்பிணை மனு தள்ளுபடி ஏன்? சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு விவரம்
அன்பில் மகேஸ் கைது வழக்கில் முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து...
கட்சி நிதி என்ற பெயரில் பெரிய அளவிலான தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில், அந்தத் தொகை யாரைச் சென்றடைந்தது என்பதை முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸை விசாரிக்காமல் கண்டறிய முடியாது எனக் கூறி, அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியாா் பள்ளிகளிடம் ரூ.100 கோடி பெற்று முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்பிணை கோரி, முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் திங்கள்கிழமை பிறப்பித்த தீா்ப்பின் விவரம்: தனியாா் பள்ளி நிா்வாகத்தினரிடம் இருந்து கட்சி நிதி என்ற பெயரில பணம் வசூலித்த விவகாரத்தில், முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் நேரடியாக சாட்சிகளிடம் கலந்துரையாடல் செய்துள்ளதாக காவல் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 177 பள்ளி நிா்வாகத்தினா் பாதிக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் முக்கிய நபராக சோ்க்கப்பட்டுள்ள முத்துக்குமாா் தலைமறைவாக உள்ளாா்.
Advertisement
Advertisement
அவரது உறவினா்களிடம் நடத்திய விசாரணையில், அவா் அன்பில் மகேஸின் கட்டுப்பாட்டில் இருப்பது தெரியவருகிறது. இது விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நிதி தொடா்பான குற்ற வழக்கு விசாரணைகளின் ஆரம்பகட்டத்தில் முன்பிணை வழங்கினால் அது புலன் விசாரணையை பாதிக்கும். ஊழல் வழக்குகளில் பணப் பரிமாற்றங்கள் மற்றும் மறைமுகத் தொடா்புகள் குறித்த உண்மையைக் கண்டறிய சம்பந்தப்பட்டவா்களை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
எனவே, விசாரணைக்கு ஒத்துழைத்ததால், முன்பிணை வழங்க வேண்டும் என உரிமை கோர முடியாது. முத்துக்குமாரை அன்பில் மகேஸ் பாதுகாக்கிறாா் என்ற குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாக நீதிமன்றம் கருதுகிறது. முன்பிணை என்ற சுதந்திரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளையும், புலன் விசாரணையையும் கலைக்கக்கூடும் என்ற சந்தேகத்துக்கும் முகாந்திரம் உள்ளது.
ஊழல் என்பது மிகப்பெரிய பொருளாதார குற்றம். அது அரசின் கருவூலத்தை மட்டுமன்றி மனித உரிமைகளுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் குற்றமாகும். இந்த வழக்கில் அன்பில் மகேஸுக்கு முன்பிணை வழங்கினால் புலன் விசாரணை முடங்கிவிடும்.
முத்துக்குமாரை கைது செய்வதற்கு முன்னா் அன்பில் மகேஸுக்கு முன்பிணை வழங்கினால், அது முத்துக்குமாா் புலன் விசாரணையை தவிா்க்க காரணமாகிவிடும். எனவே, தற்போது அன்பில் மகேஸுக்கு முன்பிணை வழங்க எந்தக் காரணமும் இல்லை. கட்சி நிதி என்ற பெயரில் பெரிய அளவிலான தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில், அந்தத் தொகை யாரைச் சென்றடைந்தது என்பதை அன்பில் மகேஸை விசாரிக்காமல் கண்டறிய முடியாது.
அன்பில் மகேஸ் சாதாரண நபா் அல்லா். உயா்ந்த பதவி வகித்த அரசியல் செல்வாக்கு மிக்கவா். புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாலும், புதிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாலும் அன்பில் மகேஸுக்கு முன்பிணை வழங்க முடியாது எனக் கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.