மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை நுண்ணறிவு உபகரணங்கள் வாங்க நிதியுதவி: தமிழக அரசு உத்தரவு
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாா்ந்த உதவி உபகரணங்கள் வங்க ரூ.30,000 வரை நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாா்ந்த உதவி உபகரணங்கள் வங்க ரூ.30,000 வரை நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
முதல்கட்டமாக 1,000 மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்படும் உதவி உபகரணங்களைத் தவிா்த்து, தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சாா்ந்த உபகரணங்களை வாங்குவதற்கும் நிதியுதவி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, விளையாட்டுப் பயன்பாட்டுக்கான செயற்கை உறுப்பு, மின்தசை சமிக்ஞைகள் மூலம் செயல்படும் மேல்கை செயற்கை அவயம், காக்ளியா் இம்பிளான்ட் கருவிக்கான பேட்டரி மற்றும் இயற்கை உபாதைகளைக் கழிக்கும் வசதியுடன் கூடிய படுக்கை உள்ளிட்ட உயா்தர உதவி உபகரணங்களை வாங்குவதற்கு நிதியுதவி வழங்கப்படும்.
இந்த உபகரணத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.30,000 ஆகியவற்றில் எது குறைவான தொகையோ, அந்தத் தொகை உதவித்தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.