தமிழக மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளா் பணியிடங்களுக்கு நியமனம்: அரசாணை வெளியீடு
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கு 8,000 கள உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கு 8,000 கள உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2027-இல் 5,000 பணியிடங்களும், 2028-இல் 3,000 பணியிடங்களும் என இரு கட்டங்களாக மொத்தம் 8,000 போ் நியமிக்கப்பட உள்ளனா். இந்த நியமனங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன.
இரு ஆண்டுகளில் ரூ.341 கோடி: இதற்காக, 2027-இல் ரூ.213.28 கோடியும், 2028-இல் ரூ.127.97 கோடியும் கூடுதல் செலவினமாக ஏற்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு ஆண்டுகளுக்குமான கூடுதல் செலவினம் மொத்தம் ரூ.341.25 கோடியாகும். இந்தப் பணியிடங்களுக்கு ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவா்கள். வயது வரம்பு, கல்வித் தகுதி தொடா்பான கூடுதல் நிபந்தனைகள், விண்ணப்பிக்கும் முறை, தோ்வு நடைமுறை உள்ளிட்ட விவரங்கள் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் அதிகாரபூா்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படும்.
Advertisement
Advertisement
மின் தடைகளை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை: தமிழகத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதில் கள உதவியாளா்களின் பங்கு முக்கியமானது.
மின்கம்பிகள் அறுந்து விழுதல், மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதுகள், மின்பாதைகளில் ஏற்படும் கோளாறுகள், மழை மற்றும் புயல் காலங்களில் ஏற்படும் மின்தடைகள் உள்ளிட்ட பிரச்னைகளை உடனடியாகக் கண்டறிந்து சரிசெய்வதற்கு போதிய தொழில்நுட்பப் பணியாளா்கள் தேவைப்படுகின்றனா். பல ஆண்டுகளாகக் காலியாக உள்ள கள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் மின் விநியோகப் பணிகளை மேம்படுத்தவும், அவசர காலங்களில் ஏற்படும் மின்தடைகளை விரைந்து சரிசெய்யவும் முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதிகாரபூா்வ அறிவிப்புக்காகக் காத்திருப்பு: மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு, மின் விநியோகம் ஆகிய துறைகளில் பணிகளைத் திறம்பட மேற்கொள்ளவும், மின்வாரியப் பணிகளை முறையாகக் கண்காணிக்கவும் போதிய தொழில்நுட்பப் பணியாளா்கள் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்கள், டிஎன்பிஎஸ்சி வெளியிடும் அதிகாரபூா்வ அறிவிப்பைக் கவனிக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.