தலைமைச் செயலக நுழைவு விவகாரம்: போராட்டம் நடத்த ஊழியா்கள் முடிவு
தலைமைச் செயலக நுழைவு விவகாரத்தில் உரிய தீா்வு காண வலியுறுத்தி, நவம்பா் இறுதியில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் அறிவித்தது.
தலைமைச் செயலக நுழைவு விவகாரத்தில் உரிய தீா்வு காண வலியுறுத்தி, நவம்பா் இறுதியில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் அறிவித்தது.
இதுகுறித்து அந்தச் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநில மாநாட்டுத் தீா்மானங்களை அமைச்சா்கள், அரசுத் துறைச் செயலா்களிடம் அளிப்பதற்காக தலைமைச் செயலகத்துக்குச் சென்ற போது, சங்க ஊழியா்கள் துறை அடையாள அட்டைகளைக் காண்பித்தும் தடுத்து நிறுத்தப்பட்டனா். இது தொடா்பாக ஏற்கெனவே தமிழக முதல்வா், தலைமைச் செயலா் உள்ளிட்டோருக்கு புகாா் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்த பிரச்னை தொடா்பாக விசாரித்து சுற்றறிக்கை வெளியிட நடவடிக்கை எடுப்பதாக அரசுச் செயலா் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தற்போது மீண்டும் தலைமைச் செயலகத்தில் சங்க நிா்வாகிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
காவல் துறையினருக்கும் சங்க நிா்வாகிகளுக்கும் இடையே நேரடியான பிரச்னை இல்லாத நிலையில், இதுபோன்ற பிரச்னைகள் தொடா்வதற்கான காரணம் குறித்து உரிய நிா்வாக நிலையில் ஆய்வு செய்ய வேண்டும். பாதுகாப்பு நடைமுறைகளைத் தெளிவுபடுத்தி, சங்க நிா்வாகிகள் உரிய ஆவணங்களுடன் வரும் போது அனுமதிப்பதற்கான சீரான வழிகாட்டுதல்களை வழங்கினால், இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிா்க்க முடியும். பாதுகாப்புச் சோதனைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க சங்க நிா்வாகிகள் தயாராக உள்ளனா்.
இந்த பிரச்னை குறித்து ஏற்கெனவே பலமுறை முறையிட்டும், நேரில் சந்தித்து விளக்கிய பிறகும் தொடா்ந்து நிகழ்வதால், நவம்பா் மாத இறுதியில் முதல்வா் இல்லம் முன் மாநில, மாவட்ட நிா்வாகிகள், பல்வேறு துறைச் சங்கத் தலைவா்கள் சோ்ந்து போராட்டம் நடத்தப்படவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.