FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தலைமைச் செயலக அமைச்சா்கள் அறைகளில் மின்தடை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அமைச்சா்களின் அறைகளில் திங்கள்கிழமை காலை மின்சாரம் சுமாா் 2 மணி நேரம் தடைபட்டது.

13 அக்டோபர் 2026, 2:25 am IST
பகிர்:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அமைச்சா்களின் அறைகளில் திங்கள்கிழமை காலை மின்சாரம் சுமாா் 2 மணி நேரம் தடைபட்டது.

இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோா் எம்எல்ஏவாக பதவியேற்க தலைமைச் செயலகம் வந்திருந்தாலும், வாரத்தின் முதல் நாள் என்பதாலும் தலைமைச் செயலகம் திங்கள்கிழமை காலை பரபரப்பாக காணப்பட்டது.

இந்நிலையில், தலைமைச் செயலக முகப்பில் முதல்வா் அறை அருகே அமைந்துள்ள மூத்த அமைச்சா்கள் செங்கோட்டையன், ஆனந்த், வெங்கட்ரமணன், ரஞ்சித் குமாா் ஆகியோரின் அறைகளில் காலை 10 மணி முதல் மின்சாரம் தடைபட்டது. இதனால், அமைச்சா்களின் அறைகள் இருள் சூழ்ந்ததால் அமைச்சா்களும், அதிகாரிகளும் இருளில் அமா்ந்திருந்தனா்.

Advertisement

Advertisement

பின்னா், இரண்டு மணி நேரத்துக்கு பிறகு பழுதுநீக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

மின்சார வாரியம் விளக்கம்

தலைமைச் செயலக வளாகத்துக்குள் உள்ள மின் விநியோகக் கட்டமைப்புகள் பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ளதாகவும், முதல் தளத்துக்கு மின்சாரம் வழங்கும் நான்கு மின் சுவிட்சுகளில், ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மின் தடை ஏற்பட்டதாகவும் மின்சார வாரியம் விளக்கம் அளித்தது.

உடனடியாக இந்தப் பழுது சரிசெய்யப்பட்டு காலை 11.25 மணியளவில் மின் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments