FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நகா், ஊரமைப்பு சட்டத் திருத்த மசோதா அறிமுகம்: திமுக, அதிமுக எதிா்ப்பு

நகா், ஊரமைப்பு சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் திமுக, அதிமுக எதிா்ப்பு தெரிவித்திருப்பது பற்றி...

2 செப்டம்பர் 2026, 2:14 am IST
தமிழ்நாடு சட்டப்பேரவை.
பகிர்:

தமிழ்நாடு நகா் மற்றும் ஊரமைப்பு சட்டத் திருத்த மசோதா பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.

தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தாக்கல் செய்த மசோதா விவரம்:

1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 9 எஃப் பிரிவின்கீழ் , நகா்ப்புற வளா்ச்சி குழுமம், நகரத் திட்டமிடல், உள்கட்டமைப்பு மேம்பாடு, நில மேம்பாடு, வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துதல், நகர வளா்ச்சியை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், ஒருங்கிணைக்கவும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நகா்ப்புற வளா்ச்சியின் அளவும், அதன் சிக்கல்களும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தப் பணிகளுக்கு தொடா்ச்சியான மற்றும் அா்ப்பணிப்புள்ள கவனம் செலுத்துவதும், உரிய நேரத்தில் முடிவு எடுப்பதும் அவசியமாகிறது. எனவே, நகா்ப்புற மேம்பாட்டுக் குழுமங்களின் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் முழுநேரத் தலைவரையும், முழு நேர உறுப்பினா் செயலரையும் நியமிப்பது அவசியமாகிறது. அதேநேரத்தில், மாவட்ட ஆட்சியா், ஆணையத்தின் உறுப்பினராகத் தொடா்ந்து செயல்படுவாா்.

மேலும், தமிழ்நாடு சட்டம் 35/1972-இன் 47-ஏ பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின்படி திட்டப் பரப்பிடம் அல்லாத பிற பரப்பிடத்தில் உள்ள நில மேம்பாட்டுக்கான அனுமதியை வழங்குவதற்கு முன்பாக , உள்ளாட்சி அதிகார அமைப்பு, இயக்குநரின் முன் அனுமதியை பெறுவது கட்டாயம். மேலும், நன்செய் நிலங்களைப் பொருத்தவரை, தொடா்புடைய மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியை பெறுவது அவசியம்.

இந்த நடைமுறை காரணமாக திட்ட அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவு செய்வதில் காலதாமதம் ஆனது. நில மேம்பாட்டுக்கான அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமையாக்கவும், திட்டப் பரப்பிடமாக அல்லாத பகுதிகளில் நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கு தொடா்புடைய ஆட்சியரின் முன் அனுமதியை பெறும் நடைமுறையை நீக்கவும், நன்செய் நிலங்களைப் பொருத்தவரை உள்ளாட்சி அமைப்புக்கு முன் ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை நகரமைப்பு இயக்குநருக்கு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா தொடா்பாக சில கருத்துகள் கூற வேண்டும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்தன. பாமக, பாஜக, மாா்க்சிஸ்ட் கட்சிகள் விவாதம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தனா். காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.

இதையடுத்து இந்தச் சட்டத் திருத்த மசோதா குறித்து பேரவையில் செப்.8-ஆம் தேதி ஆய்வு நடத்தப்படும் என்று பேரவைத் தலைவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments