கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கிருஷ்ண ஜெயந்தி விழா, வார விடுமுறை தினங்களையொட்டி, 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து...
கிருஷ்ண ஜெயந்தி விழா, வார விடுமுறை தினங்களையொட்டி, 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை நாள்களையொட்டி, சென்னையில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோா் சொந்த ஊா்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளது.
இதையடுத்து, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (செப். 3) 910 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை (செப். 4) 740 பேருந்துகளும், சனிக்கிழமை (செப். 5) 880 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
Advertisement
Advertisement
இதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்கள், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை 210 பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை தலா 115 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள், மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் 95 சிறப்பு பேருந்துகள் வீதம் இயக்கப்பட உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை (செப். 6) சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 805 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மொத்தமாக இந்த 4 நாள்களில் 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.