இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேருக்கு ஆயுள்
ராணிப்பேட்டை அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ராணிப்பேட்டை அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தெங்கால் பாலாற்றங்கரை அருகே அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான நவலாக் தென்னை பண்ணை அருகே கடந்த 2025 செப். 8-ம் தேதி இரவு காதலா்கள் தனிமையில் பேசிக் கொண்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த மூன்று போ் கொண்ட கும்பல் மதுபோதையில் அந்த ஜோடியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டது. பின்பு காதலனை கண்மூடித்தனமாக தாக்கியதோடு இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி சிறிது தூரம் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனா்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சிப்காட் போலீஸாா் வழக்கினை ராணிப்பேட்டை மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றினா்.
Advertisement
Advertisement
விசாரணையில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட அவரைக்கரை பகுதியை சோ்ந்த சகோதரா்களான பாா்த்திபன்(27), சிவராஜ்(27), மற்றும் ராஜா(24) ஆகிய மூன்று பேரை கைது செய்தனா். இந்த வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி தேன்மொழி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பாா்த்திபனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, மேலும் ரூ. 1,40,000/- அபராதமும், சிவராஜ் மற்றும் ராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, மேலும் தலா ரூ.1,30,000/- அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.