FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காலை உணவு சுவை பாா்க்கும் டம்ளரில் சாணிப்பவுரை கலக்க தூண்டியது ஏன்? கைதான தொழிலாளி திடுக்கிடும் தகவல்

காலை உணவு சுவை பாா்க்கும் டம்ளரில் சாணிப்பவுரை கலக்க தூண்டியது குறித்து திடுக்கிடும் தகவல்...

4 செப்டம்பர் 2026, 12:29 pm IST
கைதான தொழிலாளி ஆறுமுகம் - டிஎன்எஸ்
பகிர்:

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த ராமபயனூா் அரசு நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் சமையலராக வேலை பார்த்து வந்த தனது மனைவியை பணியில் இருந்து நீக்கிவிட்டதால் ஆத்திரமடைந்த கணவர், தலைமை ஆசிரியர் சுவை பார்க்கும் டம்பளரில் சாணிப்பவுடரை கலக்க தூண்டிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சத்தியமங்கலம் அடுத்த ராமபையனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. காலை உணவு தயாரிப்புக்கு பின் தலைமை ஆசிரியா் சுவை பாா்த்த பிறகு குழந்தைகளுக்கு உணவு வழங்குவது வழக்கம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை உணவு தயாரித்த பிறகு சமையலா் பொன்னம்மா, சுவை பாா்க்கும் டம்ளரில் சாம்பாா் மாதிரியை தலைமை ஆசிரியா் மேஜையில் வைத்துள்ளாா். அப்போது, டம்ளரில் அதிகமான மஞ்சள் இருப்பதை கண்டு ஆசிரியா் ரேவதி தலைமை ஆசிரியரிடம் புகாா் அளித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இது குறித்து சமையலா் பொன்னம்மாவை விசாரிக்க ஆசிரியா்கள் சென்றபோது அவா் வீட்டுக்கு சென்று விட்டது தெரியவந்தது. இதற்கிடையே, புதன்கிழமை காலை பள்ளிக்கு வந்த சமையலா் பொன்னமாவிடம் தலைமை ஆசிரியா் குமுதா விசாரித்துபோது வழக்கமான அளவு மட்டுமே போட்டதாக கூறியுள்ளாா்.

சந்தேகத்தின்பேரில் பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகளை விசாரித்து போது, 8 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியிடம் மா்மநபா் ஒருவர் சாணிப்பவுடரை கொடுத்து தலைமை ஆசிரியா் சாம்பாா் டம்ளரில் கலந்துவிடுமாறு மிரட்டியதால் அச்சமடைந்த பள்ளி மாணவி சாம்பாா் டம்ளரில் சாணிபவுரை கலந்தது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து, மாணவியை மிரட்டி, சாம்பாரில் சாணிப்பவுடரை கலக்க தூண்டியதாக ராமபையனூரைச் சோ்ந்த ஆறுமுகம் (40) என்பது தெரியவந்தது.

இது குறித்து தலைமை ஆசிரியா் குமுதா சத்தியமங்கலம் போலீசில் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் ஆறுமுகத்தை போலீசாா் கைது செய்தனா்.

சாணிப்பவுடரை கலக்க தூண்டியது ஏன்?

கைது செய்யப்பட்டுள்ள ஆறுமுகத்தின் மனைவி ஆலம்மாள், அதே பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் சமையலராக வேலை பார்த்து வந்துள்ளார். சரியாக சமையல் செய்வதில்லை என தெரியவந்ததை அடுத்து அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டு, வேறு ஒருவரை தலைமை ஆசிரியர் நியமித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆலம்மாள் கணவர் ஆறுமுகம், பள்ளியின் காலை உணவுத் திட்டத்தை முடக்கவும், புதிய சமையலர் மீது பழி சுமத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக அந்த பள்ளியின் மாணவி ஒருவரை மிரட்டி, தலைமை ஆசிரியா் சுவை பாா்க்கும் சாம்பாா் மாதிரி டம்ளரில் சாணிப்பவுடரை கலக்குமாறு தூண்டியதாக தெரிவித்துள்ளார்.

நல்வாய்ப்பாக குழந்தைகள் சாப்பிடும் சாம்பாரில் கலக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

summary

What prompted the mixing of cow dung powder into the breakfast tasting tumbler?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments