தவெக கூட்டம்: திருமாவளவனுடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!
விசிக தலைவர் திருமாவளவனுடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு பற்றி...
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவனை தவெக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.
தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது கூட்டம் வருகிற செப். 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்துள்ள மற்றும் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
தவெக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு தவெக நிர்வாகிகளான அமைச்சர்கள் என். ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து இன்று காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்த நிலையில் தற்போது விசிகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவனை தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோர் சந்தித்து கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தவெக கூட்டணி குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
TVK Meeting: TVK Ministers meet Thirumavalavan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.