இடைத்தேர்தலில் தவெக கூட்டணி வெற்றிபெற ஒத்துழைப்பு அளிப்போம்: திருமாவளவன்
இடைத்தேர்தலில் தவெக கூட்டணி வெற்றிபெற விசிக ஒத்துழைப்பு அளிப்பது குறித்து...
வருகிற இடைத்தேர்தலில் தவெக கூட்டணி வெற்றிபெற ஒத்துழைப்பு அளிப்போம் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது, "தவெக ஆட்சியமைப்பதற்கு மட்டுமே ஆதரவு தருவதாக இடதுசாரிகள் கூறி வந்தார்கள். அதன் அடிப்படையிலேயே, இந்த ஆட்சி தொடர்வதற்கான ஆதரவு எப்போதும் உண்டு.
ஆனால், தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் இடைத்தேர்தலில் தனித்து நிற்பதாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன. இது அவர்களுக்கான உரிமை.
Advertisement
Advertisement
தற்போது மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் விசிக இடம்பெற்றிருக்கிறோம். இவ்விரு தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெறுவதற்கு விசிக தரப்பில் ஒத்துழைப்பு நல்குவோம்.
ஆளுங்கட்சி குறித்து திமுக எம்.பி.யான ஆ. ராசாவின் பேச்சு மிகுந்த அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. இது திமுகவுக்கே எதிராகப் போய்விடும்.
முதல்வரையே ஒருமையில் பேசுவது, மற்றவரின் பிறப்பு குறித்து கேள்வி எழுப்புவது என்பதெல்லாம் பெரியார் பாசறையில் வளர்ந்தவரின் பேச்சாகத் தெரியவில்லை. இது திமுக மீதான நன்மதிப்பைச் சீர்குலைக்கும்" என்று தெரிவித்தார்.
VCK will extend cooperation for the TVK alliance's victory in the by-election, says Thol. Thirumavalavan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.