FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் ஆட்சி இல்லை: டாக்டர் கே.ஜி.அருண்ராஜ்

தமிழகத்தில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தவெக ஆட்சி இல்லை என்று அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

7 செப்டம்பர் 2026, 3:08 am IST
அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தவெக ஆட்சி இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

அரசின் கவனத்துக்கு வராமல் திண்டுக்கல் மாவட்டத்தில் இடதுசாரிகள் குறித்த விவரம் சேகரிப்பு குறித்த சுற்றறிக்கையை அதிகாரிகள் வெளியிட்டது தொடா்பான கேள்விக்கு அவா் இவ்வாறு பதிலளித்தாா்.

இதுதொடா்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் அதிகாரிகளின் ஆட்சி நடைபெற்றது கடந்த திமுக ஆட்சியில்தான். அப்போது, முதல்வருக்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஆட்சி இருந்தது. அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு மட்டுமே ஆட்சி நடைபெற்றது.

தற்போது குறிப்பிட்ட ஒரு நிகழ்வைப் பொருத்தவரை (இடதுசாரிகள் விவரங்கள் சேகரிப்பு குறித்த சுற்றறிக்கை) தமிழக அரசின் கவனத்துக்கு வராமல் அதிகாரிகள் சிலா் அதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனா். அதற்கு துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தவெக ஆட்சி இல்லை. இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஆட்சி இருக்கிறது எனக் கூறுவது வேடிக்கையானது. உண்மையில் ஒரு நோ்மையான, வெளிப்படையான தலைமை இருக்கிறது. இந்தத் தலைமையின் கீழ் பணியாற்றுவது ஒரு பெரிய வாய்ப்பு என்று அரசு அதிகாரிகள் கருதுகிறாா்கள். ஒரு சிலா் செய்யும் தவறுகளுக்காக, பொதுவாக பேச முடியாது.

மேலும், தனித்துவமான அரசியல் அடையாளத்தை உருவாக்கும் நோக்கில் வருகிற செப்.9-ஆம் தேதி நடைபெற உள்ள தவெக ஆதரவுக் கட்சிகளின் கூட்டத்தில் எங்களது கூட்டணிக்கு ஒரு பொதுவான பெயா் சூட்டப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments