FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

13 கூண்டுகள், 200 கேமராக்கள், 2 கும்கி யானைகள்: ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணி தீவிரம்!

ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக....

6 செப்டம்பர் 2026, 12:13 pm IST
கும்கி யானை மீது அமர்ந்து கண்காணித்து புலியை மயக்க ஊசி செலுத்தும் ஒத்திகையில் ஈடுபட்ட வனத் துறையினர், அதிநவீன தானியங்கி நேரலை கேமரா.
பகிர்:

கூடலூர் அருகே ஆட்கொல்லி புலியைப் பிடிக்க 13 கூண்டுகள், 2 கும்கி யானைகள், 200 அதிநவீன தானியங்கி கேமராக்களை பொருத்தி, வனத் துறையினர் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், ஓவேலி லாரஸ்டன் பகுதியில் இரண்டு தொழிலாளர்களை கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணி தொடர்ந்து 17-ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.

புலியின் நடமாட்டதை அறிய 200 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புலி நடமாடும் இடங்களை அடையாளம் கண்டு 13 இடங்களில் கூண்டு வைத்து கண்காணிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

புலியின் நடமாட்டத்தைத் துல்லியமாகக் கண்டறிய புதிய தொழில்நுட்பங்களை வனத் துறை பயன்படுத்தி வருகின்றனர்.

மூன்று கால்நடை மருத்துவர்கள் தலைமையில் பிரிக்கப்பட்ட மூன்று குழுக்கள் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது குறித்த ஒத்திகையில், நேற்று வனத் துறையினர் ஈடுபட்டனர். ஒத்திகையில் வனத்துக்குள் ரோந்து சென்று பிடிப்பது, கும்கி யானைகள் மீது அமர்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது குறித்தும் ஒத்திகை நடைபெற்றது.

கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை வனத் துறை அதிகாரிகளின் கைப்பேசிகளில் உள்ள பிரத்யேக செயலியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக புலி நடமாட்டம் பதிவான உடனே அதிகாரிகளுக்கு நேரலை காட்சிகள் மற்றும் எச்சரிக்கை தகவல்கள் கிடைக்கும்.

கும்கி யானை உதவியுடன் புதர் மற்றும் தேயிலைத் தோட்டத்தில் சுற்றித் திரியக்கூடிய ஆட்கொல்லி புலியை கண்காணித்து பிடிப்பதற்கான நடவடிக்கையிலும் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

summary

Forest Department officials have intensified surveillance operations near Gudalur to capture a man-eating tiger by deploying 13 cages, two kumki elephants, and 200 state-of-the-art automatic cameras.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments