சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்?
உசிலம்பட்டி அருகே அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பற்றி....
மக்களுக்கு என்ன தேவையோ அதை நாளை சட்டப்பேரவையில் முதல்வர் பேசுவார் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற மற்றும் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த பி.கே. மூக்கையாத் தேவரின் 47 வது நினைவு நாளையொட்டி உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தவெக சார்பில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் எம்எல்ஏகள் விஜய், தங்கப்பாண்டி உள்பட 10 எம்எல்ஏ - க்கள் பங்கேற்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், நானும் அனைத்து எம்எல்ஏ க்களும் இன்று பி.கே.மூக்கையாத் தேவர் நினைவு நாளையொட்டி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளோம். மேகமலை விவகாரத்தில் உண்மை நிலையை எடுத்து சொல்லாமல் விட்டு விட்டனர். அந்த வழக்கை நடத்தும் போது எந்த அக்கரையும் காட்டாமல் வழக்கை நடத்தியுள்ளனர். வழக்கு நீதிமன்றத்தில் உள்ள சூழலில் இன்றைய மக்களின் உண்மை நிலைய நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்படும்.
Advertisement
Advertisement
அந்த மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உசிலம்பட்டி பேருந்து நிலைய பணி முடங்கியது திமுக நிர்வாகிகளின் கால்ப்புணர்ச்சியால் நடந்த ஒன்று. அதை சரி செய்து கொண்டிருக்கிறோம். 58 கால்வாய்க்கும் நிரந்தர அரசானை கிடைக்க சட்டப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும். கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புச் சோதனை இயல்பு தான் எந்த கால்புணர்ச்சியும் இல்லை. எந்த பொய்யான வழக்கும் போட முடியாது. பணம் வாங்கி கொண்டு வேலைக்கு அமர்த்தியதாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வழக்காக தான் இருக்கும் என நினைக்கிறேன். ஊழல் செய்தால், தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. ஒரு சில நிகழ்வுகள் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், மாநில நிர்வாகிகளுடன், பேசி வருகிறோம். அவர்களோடு இணைந்து பணியாற்றுவோம். தமிழக மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, மக்களுக்கு என்ன தேவையோ அதை நாளை சட்டப்பேரவையில் முதல்வர் பேசுவார் என்று தெரிவித்தார்.
Minister Nirmalkumar has stated that the Chief Minister will speak about whatever the people need in the Legislative Assembly tomorrow.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.