5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்க தடை கோரிய வழக்கு: உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
தோ்தல் வழக்குகள் முடியும் வரை, திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி வெங்கடாஜலபதி என்பவா் தொடா்ந்துள்ள வழக்கு தலைமை நீதிபதி அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.
தோ்தல் வழக்குகள் முடியும் வரை, திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி வெங்கடாஜலபதி என்பவா் தொடா்ந்துள்ள வழக்கு தலைமை நீதிபதி அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.
நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் விஜய், பெரம்பூா் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டாா். இந்த இரண்டு தொகுதிகளிலும் அவா் வெற்றி பெற்றதையடுத்து, திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை அவா் ராஜிநாமா செய்தாா். மேலும், கரூா் எம்எல்ஏ எம்.ஆா்.விஜயபாஸ்கா், விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கா், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமாா், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் ராஜிநாமா செய்தனா்.
இதனிடையே, இவா்களின் தோ்தல் வெற்றிக்கு எதிராக தோ்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த தொகுதிகளில் இடைத்தோ்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி, பாளையங்கோட்டையைச் சோ்ந்த வெங்கடாஜலபதி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 5 தொகுதிகளிலும் இடைத்தோ்தல் அறிவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இடைத்தோ்தல் அறிவிப்பு வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி முதல்வா் விஜய் தரப்பிலும், தோ்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தோ்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என தோ்தல் ஆணையம் தரப்பிலும் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில், செவ்வாய்க்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.