பெண்கள் பற்றி இழிவாகப் பேசிய தவெகவினரை கட்சியைவிட்டே நீக்கியிருக்கிறோம்! - என். ஆனந்த்
சமூக ஊடகங்களில் பெண்கள் குறித்து தவெகவினரும் அவதூறாகப் பேசுவதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியதற்கு அமைச்சர் ஆனந்த் பதில்...
பெண்கள் பற்றி தவறாகப் பேசும் தவெகவினரைக் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் கூறியுள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "பெண்கள் குறித்து யாரும் தவறாக பேசக் கூடாது என்றும் அப்படி செய்தால் இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் விஜய் கூறியுள்ளார். இது அனைவருக்கும் ஒரு பொதுவான கருத்து. ஒரு பெண் தலைவராக இதை நான் நிச்சயமாக வரவேற்கிறேன்.
அதேநேரத்தில் பெண்கள் குறித்து சமூக ஊடகங்களில் கொச்சையாக பதிவு செய்பவர்கள் தவெகவினரைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
Advertisement
Advertisement
அதனால் முதல்வர் இதனை கவனத்தில் கொண்டு தவெகவினரையும் கண்டிக்க வேண்டும்" என்று பேசினார்.
அதற்கு அமைச்சர் நிர்மல் குமார், "முதல்வர் சொன்னது எங்கள் கட்சியினரையும் சேர்த்துதான். பெண்கள் பற்றி யார் தவறாக பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். ஒரு சில திமுகவினர், தவெகவினர் பெயரில் போலி ஐடி உருவாக்கி பதிவிட்டு வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் இதுபோன்று செய்வது திமுகவினர்தான்" என்றார்.
"அப்படி தவறு செய்த தவெகவினரை கட்சியைவிட்டே நீக்கியிருக்கிறோம்" என்று அமைச்சர் என். ஆனந்த் கூறினார்.
We have expelled TVK members who spoke disparagingly about women from the party: N. Anand
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.