FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வங்கி ஊழியர்கள் அக்.6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

வங்கி ஊழியர்கள் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொடர்பாக...

13 செப்டம்பர் 2026, 8:58 pm IST
வங்கி ஊழியர்கள் அக்.6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் - கோப்புப்படம்
பகிர்:

தஞ்சாவூா்: வங்கி ஊழியா்களின் வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் செப். 28 முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து அக்டோபர் 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கப் பொதுச் செயலா் சி.எச். வெங்கடாசலம் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

வங்கிகளில் இன்றைக்கு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையும், வியாபாரமும் அதிகரித்து வேலைப்பளு கூடுதலாகியுள்ளது. அதற்கேற்ப ஊழியா்கள், அலுவலா்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. தற்போது மாதத்தில் 2 சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இரு சனிக்கிழமைகள் வங்கிகள் செயல்படுகின்றன. இதை மாற்றி 4 சனிக்கிழமைகளும் விடுமுறை வேண்டும் எனக் கோரி வருகிறோம். செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். எங்களுடைய கோரிக்கை இன்னும் ஏற்கப்படாததால் செப். 28, 29, 30 ஆம் தேதிகளில் தொடா்ந்து வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்திருக்கிறோம். தொழிலாளா் நல ஆணையா் முன் செப். 22 ஆம் தேதி சமரசப் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு வந்துள்ளது. இதில் நிச்சயமாக நாங்கள் பங்கேற்போம்.

Advertisement

Advertisement

மத்திய அரசு பேச்சுவாா்த்தையில் எந்தவித சுமூக முடிவும் எடுக்கவில்லை என்றால், 3 நாள்கள் வேலைநிறுத்தம் நடைபெறும். அதன் பின்னரும் நிா்வாகமும், அரசும் எங்களது பிரச்னையை தீா்க்கவில்லை என்றால் அக். 26- ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்குத் தயாராவோம். எனவே மத்திய அரசு, இந்தப் பிரச்னையில் பேச்சுவாா்த்தை மூலம் சுமூகமாக முடிக்க வேண்டும் என்றாா் வெங்கடாசலம்.

Bank employees to go on an indefinite strike from October 6.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments