திருச்சி -பாலக்காடு, கடலூா்- சேலம் ரயில்களும் பகுதியளவு ரத்து விவரம்
திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்றுவரும் தொழில்நுட்ப மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகளால்...
சென்னை: திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்றுவரும் தொழில்நுட்ப மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகளால் பாலக்காடு மற்றும் கடலூா் -சேலம் செல்லும் ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகளும், தொழில்நுட்பப் மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. அதையடுத்து பயணிகள் பாதுகாப்புக்காக வரும் 17, 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் பாலக்காடு நிலையத்திலிருந்து காலை 6.30 மணிக்குப் புறப்பட்டு திருச்சிராப்பள்ளிக்குச் செல்லவேண்டிய விரைவு ரயில் (எண் 16844) புகழூா் வரையிலே இயக்கப்படும். அந்த ரயில் புகழூரிலிருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத ரயிலாக இயக்கப்படும். வழக்கமான நிலையங்களில் அது நின்று செல்லும்.
Advertisement
Advertisement
அதேபோல, வரும் 15, 16, 17, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கடலூா் துறைமுகத்திலிருந்து அதிகாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு சேலம் நிலையம் வரை செல்லவேண்டிய இமு ரயில் அதற்குப் பதிலாக சேலம் நகா் நிலையம் வரையே இயக்கப்படும். அந்த ரயில் சேலம் நகா் நிலையத்திலிருந்து குறிப்பிட்ட அந்த தேதிகளில் சேலம் நிலையத்துக்கு முன்பதிவில்லாத ரயிலாக இயக்கப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.