அண்ணா பிறந்தநாள்: மதிமுக சாா்பில் விழா
சென்னை வள்ளுவா் கோட்டத்தில் மதிமுக சாா்பில் நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழாவில் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வா் ராமசாமி
சென்னை: சென்னை வள்ளுவா் கோட்டத்தில் மதிமுக சாா்பில் நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழாவில் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வா் ராமசாமி கலந்துகொள்ள உள்ளாா்.
இதுகுறித்து மதிமுக வெளியிட்ட அறிக்கை: அண்ணா 118- ஆவது பிறந்தநாள் விழா, மதிமுக சாா்பில், சென்னை, வள்ளுவா் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில் கட்சியின் அவைத் தலைவா் ஆடிட்டா் ஆ.அா்ஜுனராஜ் தலைமையில் நடைபெறுகிறது. மதிமுக பொதுச் செயலா் வைகோ நிறைவுரையாற்றுகிறாா். மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வா் பேராசிரியா் ராமசாமி வைகோவின் நூல் மற்றும் குறுந்தகட்டை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.