FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மூன்றில் ஒரு வேலைவாய்ப்பு சுற்றுலாத் துறையில் உருவாகிறது! சுமன் பில்லா

சுற்றுலா சிறப்பு கருத்தரங்கில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குநர் சுமன் பில்லா பேசியது பற்றி...

15 செப்டம்பர் 2026, 11:49 am IST
சுமன் பில்லா - TNIE
பகிர்:

புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகளில் மூன்றில் ஒன்று சுற்றுலாத் துறையில் உருவாவதாக மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குநர் சுமன் பில்லா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த கருத்தரங்கை மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குநர் சுமன் பில்லா குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்.

Advertisement

Advertisement

அவர் பேசியதாவது:

“உலகளாவிய சுற்றுலா துறையில் இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதை கண்முன் தெரிகிறது. அதிக முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் உருவாகின்றன. விடுதிகள், வீட்டில் தங்கும் வசதி (ஹோம் ஸ்டே) போன்ற தொழில்கள் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமலேயே அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகின்றன.

உலகளவில் சுற்றுலா துறை வருமானம் 11.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளன. இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.8% ஆகும். அதேபோல், 36.6 கோடி வேலைவாய்ப்புகள் சுற்றுலா துறை மூலம் கிடைக்கின்றன. கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகளில் மூன்றில் ஒரு வேலைவாய்ப்பு சுற்றுலாத் துறையில் உருவாவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டில் 132 கோடி பேர் உள்நாட்டு சுற்றுலா சென்றனர். இந்த எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டுல் 434 கோடியாக அதிகரித்துள்ளது. இதுபோன்ற வளர்ச்சியை எந்த நாடும் அடையவில்லை. வேகமாக வளரக் கூடிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் ஒரு கோடி வெளிநாட்டினர் சுற்றுலாப் பயணிகளாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது 2.1 கோடியாக அதிகரித்துள்ளது. 8.9 கோடி வேலை வாய்ப்புகள் சுற்றுலாத் துறையில் உருவாகியுள்ளது.

இதுவரை இல்லாத வகையில் இந்தியர்கள் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். 3.2 கோடி பேர் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மத்திய சுற்றுலாத் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். 8.9 கோடியாக இருக்கும் வேலை வாய்ப்புகளை அடுத்த 2030-க்குள் கூடுதலாக 2.5 கோடி அதிகரிக்க வேண்டும் என்றார்.

2014-ல் 75 ஆக இருந்த விமான நிலையங்கள் எண்ணிக்கை தற்போது 150 ஆக அதிகரித்துள்ளது. 400 ஆக இருந்த விமானங்களின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் ஆயிரம் விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இது உள்நாட்டு சுற்றுலாத் தலங்களை இணைத்து சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்” எனத் தெரிவித்தார்.

summary

One in three jobs is created in the tourism sector! Suman Billa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments