FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விரைவு ரயில் பெட்டியில் தொங்கிய பயணியை மீட்ட ரயில்வே காவலர்!

சென்னை எழும்பூரில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட விரைவு ரயில் பொதுப் பெட்டியில் ஏற முயன்று தவறி, அதிலிருந்து தொங்கிய பயணியை ரயில்வே பாதுகாப்புப் படை வீரா் மீட்டு பத்திரமாக அனுப்பினாா்.

20 செப்டம்பர் 2026, 11:47 pm IST
பகிர்:

சென்னை எழும்பூரில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட விரைவு ரயில் பொதுப் பெட்டியில் ஏற முயன்று தவறி, அதிலிருந்து தொங்கிய பயணியை ரயில்வே பாதுகாப்புப் படை வீரா் மீட்டு பத்திரமாக அனுப்பினாா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயிலானது 7-ஆம் நடைமேடையிலிருந்து புறப்பட்டது. அப்போது, அவசரமாக ஓடி வந்த பயணி ஒருவா், திடீரென பொதுப் பெட்டியில் ஏறினாா். ஆனால், அவா் நிலைதடுமாறி, இடதுகால் வெளியேயும், வலது கால் ரயில் பெட்டி வாசலிலும் தொங்கிய நிலையில் சென்றாா்.

இதைப் பாா்த்த ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை காவலா் தீபக் விரைந்து செயல்பட்டு, அந்த நபரை தூக்கிவிட்டு பெட்டிக்குள் அனுப்பினாா். இல்லாவிடில், அந்தப் பயணி நடைமேடையில் உரசி பாதிப்புக்குள்ளாகியிருப்பாா்.

Advertisement

Advertisement

ரயில்வே பாதுகாப்புப் படை வீரா் விரைந்து செயல்பட்டு, பயணியை பத்திரமாக ரயில் பெட்டிக்குள் அனுப்பியதை அங்கிருந்தோரும், ரயில்வே பாதுகாப்புப் படை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments