FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா? தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்வி

முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா? என்று தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

21 செப்டம்பர் 2026, 12:39 pm IST
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம் - முதல்வர் விஜய். - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைவது குறித்து ஆதவ் ஆர்ஜூனா பேச்சுக்கு பதிலளித்த மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம், முதல்வருக்கே தெரியாமல் அரசாரணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைவது என்பது முதல்வரின் இறுதி முடிவு அல்ல என்று ஆதவ் அர்ஜூனா கூறியிருப்பது குறித்து பெ. சண்முகத்திடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பெ. சண்முகம், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைவது குறித்து முதல்வர் இறுதியான முடிவை எடுக்கவில்லை என்றால், அது குறித்து அரசாணை வெளி வந்துள்ளது ஏன். அரசாணை எண் 564-ல், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என அரசாணை வெளியாகியிருந்தது.

Advertisement

Advertisement

அப்படியென்றால் முதல்வருக்கு தெரியாமல் அரசாணை வெளியாகியருக்கிறதா? என்று கேட்டால் வெகு சதாரணமான கேள்வியை கேட்கிறேன்.

அரசின் முடிவைத்தான் அரசாணை வெளிப்படுத்துகிறது. எனவே, முதல்வருக்குத் தெரியாமல் அரசாணை வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லை என்றால் இடத்தை மாற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைய முன் வைத்துள்ளோம். யார் ஆட்சியாக இருந்தாலும் இதைத்தான் வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார்.

இல்லையென்றால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் வராது, புதிய இடம் ஆய்வில் இருக்கிறது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், தங்களது பணிகள் குறித்து பேசிய பெ. சண்முகம், டெண்டர்களை வெளியிடும் முன்பே, பணிகளை முடிப்பது, பணிகளை முடித்துவிட்டு டெண்டர்களை விடுவது போல அல்லாமல் எங்கள் பணிகள் நடந்து முடிந்துள்ளது என்றார்.

நாங்கள் செய்த வேலைகளைப் பார்த்து மக்கள் வாக்களிக்காவிட்டாலும், எங்கள் பணிகளை அங்கீகரித்து பல குடும்பத்தினர் உதவியிருக்கிறார்கள் என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments