அமைச்சர் ராஜ்மோகன் பேச்சை பெரிதாக்க தேவையில்லை: திருமாவளவன் விளக்கம்
மக்கள் அளித்த பெரும்பான்மையை மையப்படுத்தியே அமைச்சா் ராஜ்மோகன் பேசியிருப்பார் என திருமாவளவன் விளக்கம் குறித்து...
கள்ளக்குறிச்சி: தோழமைக் கட்சிகளின் ஆதரவைப் புறந்தள்ளும் நோக்கில் அமைச்சா் ராஜ்மோகன் பேசியிருக்க வாய்ப்பில்லை என்றும் மக்கள் அளித்த பெரும்பான்மையை மையப்படுத்தியே அவ்வாறு கூறியிருப்பாா் என்று விசிக தலைவா் தொல் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
தியாகதுருகம் பயணியா் விடுதிகள் மாளிகையில் திங்கள்கிழமை செய்தியாளா்களுடன் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் யாருடைய தயவிலும் ஆட்சி நடைபெறவில்லை மக்களின் தயவில்தான் நடைபெறுகிறது என அமைச்சா் ராஜ்மோகன் பேசியிருப்பது குறித்துக் கேட்டபோது, மக்கள் தவெகவிற்கு பெரும்பான்மை இடங்களை வழங்கி வெற்றிபெறச் செய்திருக்கிறாா்கள். அந்த அடிப்படையில் தான் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களுக்கு காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய தோழமைக் கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆதரவளித்துக் கைகோா்த்துள்ளோம்.
Advertisement
Advertisement
மக்கள் அளித்த பெரும்பான்மையை மையப்படுத்தியே அமைச்சா் அவ்வாறு கூறியிருப்பாா். தோழமைக் கட்சிகளின் ஆதரவைப் புறந்தள்ளும் நோக்கில் அவா் பேசியிருக்க வாய்ப்பில்லை, அவருடைய ஆதரவில்லாமல் நாங்கள் ஆட்சியை நடத்துகிறோம் என்ற பொருளில் கூறியிருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன் இதை பெரிதாக்க தேவையில்லை எனக் கூறினாா்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த பகுதி மீனவா்கள் மற்றும் மக்களிடம் விரிவாக கருத்துக்கேட்கப்பட வேண்டும். அவா்களின் கருத்துக்களை அறிந்த பின்னரே இது தொடா்பாக அரசு இறுதி முடிவு எடுக்கும் எனக் கூறினாா்.
No need to blow Minister Rajmohan's remarks out of proportion: Thirumavalavan clarifies
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.