தவெகவின் தாய்ச் சிறுத்தை திருமாவளவன்: அமைச்சர் ராஜ்மோகன்
தவெகவின் தாய்ச் சிறுத்தை திருமாவளவன் என அமைச்சர் ராஜ்மோகன் பேசியது குறித்து...
தவெகவின் தாய்ச் சிறுத்தை திருமாவளவன் என அமைச்சர் ராஜ்மோகன் திங்கள்கிழமை (அக். 12) பேசியுள்ளார்.
திண்டிவனத்தில் விசிக சார்பில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் நேற்று பேசிய அமைச்சர் வன்னி அரசு, “தவெக கூட்டணியில் பாமக இடம்பெற்றால் விசிக வெளியேறும்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:
Advertisement
Advertisement
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் விசிக ஒரு தூணாக நிற்கிறது. எங்கள் கூட்டணி உறுதியாக இருக்கிறது. எந்தவொரு குழப்பமும் சஞ்சலமும் இல்லை. நிறைய பேர் கருத்துகள் சொல்லலாம்; ஆனால், உண்மைத் தன்மை என்னவென்று எங்களுக்குத் தெரியும்.
தொல். திருமா என்பவர் எங்கள் தாய்ச் சிறுத்தை. அவர் சமூக நீதியின் முன்னத்தி ஏர். திருமாவும் தளபதியும் சேர்ந்திருப்பது ஒரு கொள்கைக் கூட்டணி. கூட்டணி பலமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
Minister Rajmohan stated on Monday (Oct. 12) that Thirumavalavan is the 'mother leopard' of TVK.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.