பிரசார மேடையில் சத்தியபாமாவிடம் கூறியது என்ன? ராஜ்மோகன் விளக்கம்!
தாராபுரம் பிரசார மேடையில் வேட்பாளர் சத்தியபாமாவின் காதோரம் பேசியது என்ன என்பது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்...
தாராபுரம் பிரசார மேடையில் வேட்பாளர் சத்தியபாமாவின் காதோரம் பேசியது என்ன என்பது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
மக்கள் வெகுநேரமாக காத்துக்கொண்டிருப்பதால் உரையை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் காரணத்துக்காக பெண்ணின் கண்ணீரை தவறாக சித்திரிக்கிறார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
Advertisement
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் ஜோசப் விஜய் நேற்று (அக். 1) பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார மேடையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் ஆகியோரும் பங்கேற்றுப் பேசினர்.
இதனைத் தொடர்ந்து தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா பேசினார். அவர் பேசிக்கொண்டு இருக்கும்போது அமைச்சர் ராஜ்மோகனுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றுப் பேசியதும் சத்தியபாமாவின் காதோரம் வந்து அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து வெளியேறிய பிறகு சமூக வலைதளப் பக்கங்களில் தன்னை அவதூறாகப் பலர் பேசுவதாகக் கூறி கண்கலங்கினார். 2 மாதங்களாக செல்போன் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாகவும், சமூகவலைதள விமர்சனங்களால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு கண்கலங்கினார்.
அருகில் இருந்த முதல்வர் விஜய், சத்தியபாமாவுக்கு ஆறுதல் கூறும் வகையில் அவரின் தோள்களைப் பற்றிக்கொண்டு ஆசுவாசப்படுத்தினார்.
இந்நிலையில், செல்போன் அழைப்புக்கு பிறகு சத்திபாமாவின் காதுகளில் ராஜ்மோகன் பேசியதைத் தொடர்ந்து சத்தியபாமா அழுததாக சமூக வலைதளங்களில் பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் வெகுநேரமாக காத்துக்கொண்டிருப்பதால் உரையை விரைந்து முடிக்குமாறு சத்தியபாமாவிடம் கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பெண்ணிக் கண்ணீரை அரசியல் காரணத்துக்காக தவறாக சித்திரிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
What did Rajmohan say to tvk dharapuram candidate Sathyabama on the campaign stage Here is his explanation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.