தவெக ஆட்சி மக்கள் தயவில்தான் நடக்கிறது- அமைச்சர் ராஜ்மோகன்
திருநெல்வேலியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கம் பற்றி...
தவெக ஆட்சி மக்கள் தயவில்தான் நடக்கிறது என்று பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதங்கள், எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு, புதிய சட்டப்பேரவை கட்டடம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். அதில், முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்தானே முடிந்திருக்கிறது. எதிர்க்கட்சியினர் அனைவருக்கும் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. வருகிற சட்டப்பேரவை கூட்டத்தொடர்களில் எதிர்க்கட்சியினர் இன்னும் மெருகேறுவார்கள் என நினைக்கிறோம். முதல்வர் விஜய் பேசும்போது சுமார் ஒரு மணி நேரம் தி.மு.க.வினர் குறுக்கீடு செய்தனர்.
சட்டப்பேரவையின் மாண்பை குறைக்கும் வகையில் சிலர் தரையில் அமர்ந்தனர். அதற்கு முதல்வர் அளித்த பதிலடியைத்தான் அனைவரும் பார்த்தனர். தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் அதிகளவில் நேரலையில் பார்க்கின்றனர். சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. மக்கள் தங்களது ஆட்சியையும் சட்டப்பேரவை செயல்பாடுகளையும் கவனித்து வருகின்றனர். சட்டப்பேரவையில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
Advertisement
Advertisement
எனவே புதிய சட்டப்பேரவை தேவைதான். இருப்பினும் இதுகுறித்து மக்களின் கருத்தைக் கேட்டு முடிவெடுப்போம். இறுதி முடிவை முதல்வர் எடுப்பார். கோட்டு சூட்டு போட்டு எடப்பாடி பழனிசாமி வெளிநாடு போகவில்லையா? முதலீட்டுக்காகத்தானே சென்றார்? தமிழகத்திற்கு நல்ல முதலீடுகள் வர வேண்டும் என்பதே அரசின் நோக்கம். சண்முகம் வயதில் பெரியவர். அவருடைய அனுபவத்தை மதிக்கிறோம். அவர் கூறுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அவர் தெரிவிக்கும் விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்.
அவருடைய அனுபவம் எங்களைவிட அதிகம். எனவே அவர் கூறும் கருத்துகளை நாங்கள் மதிக்கிறோம். அரசியல் பேச்சு குறைவு; செயல் அதிகம். அதுவே தமிழக வெற்றிக் கழகத்தின் அணுகுமுறை. நாங்கள் தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். மக்கள் பணியில் அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டி நிலவுவது நல்ல விஷயம்தான். மக்கள் நலனை மையமாக வைத்து பணியாற்றுவதே தங்களது நோக்கம். மக்கள் பணியில் போட்டி போட்டு பணியாற்றி வருகிறோம். மக்கள் தயவில்தான் ஆட்சி நடைபெறுகிறது என்றார்.
School Education, Tamil Development, Information and Publicity Minister Rajmohan stated that government functions only by the grace of the people.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.