FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆண்டுதோறும் சினிமா, சின்ன திரை விருதுகள்: ராஜ்மோகன் உறுதி

காலம் தாழ்த்தாமல் சினிமா, சின்ன திரை விருதுகள் வழங்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் பேசியது குறித்து...

அமைச்சர் ராஜ்மோகன் - எக்ஸ்
பகிர்:

காலம் தாழ்த்தாமல் இனி ஆண்டுதோறும் சினிமா மற்றும் சின்ன திரை விருதுகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (அக். 1) தெரிவித்தார்.

சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறு மணிமண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியதை செலுத்தப்பட்டது.

தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கடரமணன் ஆகியோர் சிவாஜி கணேசன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisement

Advertisement

இதுமட்டுமின்றி, இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு, நடிகர் பிரபு, நடிகர் நாசர், விக்ரம் பிரபு மற்றும் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் செய்தியார்களுடன் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:

''தமிழக அரசு சார்பில் சிவாஜி கணேசனுக்கு மரியாதை செய்வது எங்கள் கடமை. அடுத்து நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும். நடிப்புதான் என் தெய்வம் எனக் கூறியவர் சிவாஜி கணேசன்.

இன்று 99வது பிறந்தநாள்; அடுத்து நூற்றாண்டு பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படும். நூற்றாண்டு விழா தொடர்பாக நடிகர் பிரபு அளித்துள்ள கோரிக்கைகளை தமிழக முதல்வருடன் ஆலோசித்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெள்ளித் திரை, சின்ன திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் கொடுக்கப்படும். அவரின் பெயரில் விரைவில் விருதுகள் வழங்க ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்'' எனக் குறிப்பிட்டார்.

summary

Annual cinema and television awards: Rajmohan confirms

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments