FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஊழலுக்கு எதிராக பேசுகிற ஆதவ் அர்ஜுனா, ஆளுநருடைய நடவடிக்கைக்கு எதிராகப் பேசுவாரா? - சு.வெங்கடேசன் கேள்வி

ஊழலுக்கு எதிராக பேசுகிற ஆதவ் அர்ஜுனா, ஆளுநருடைய நடவடிக்கைக்கு எதிராகப் பேசுவாரா? என சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருப்பது தொடர்பாக...

21 செப்டம்பர் 2026, 6:48 pm IST
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேன் - எக்ஸ்
பகிர்:

ஊழலுக்கு எதிராக நெஞ்சம் நிமிர்த்திப் பேசுகிற ஆதவ் அர்ஜுனா, ஆளுநருடைய இந்த நடவடிக்கைக்கு எதிராகப் பேசுவாரா? என சிபிஐ(எம்) மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "கடந்த காலத்தில் நடந்த ஊழல் குறித்து கம்யூனிஸ்ட்கள் நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியுமா?" என்று கேட்டிருக்கிறார்.

Advertisement

Advertisement

ஊழலுக்கு எதிராக எல்லாக் காலங்களிலும் நெஞ்சம் நிமிர்த்தி அரசியல் செய்பவர்கள் கம்யூனிஸ்ட்கள். ஊழல் செய்தவர்கள் மீது தவெக அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு நிச்சயம் நாங்கள் ஆதரவாக இருப்போம்; உறுதுணையாக இருப்போம்.

ஆனால் கேள்வி என்னவென்றால், கடந்த கால ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான அமைச்சர்கள் மீதான வழக்குகளுக்கு அனுமதி கொடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது யார்? ஆளுநர்.

ஊழலுக்கு எதிராக நெஞ்சம் நிமிர்த்திப் பேசுகிற ஆதவ் அர்ஜுனா அவர்கள், ஆளுநருடைய இந்த நடவடிக்கைக்கு எதிராகப் பேசுவாரா? உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகப் பேசுவாரா? பேச வேண்டும். அதுதான் ஊழலுக்கு எதிரான முழுமையான நடவடிக்கை.

இன்னும் நான் சொல்கிறேன். இப்போது நீங்கள் நிறுத்தியிருக்கிற இரண்டு வேட்பாளர்களும் ஊழலுக்கு எதிராக என்றைக்காவது பேசியிருக்கிறார்களா?

ஊழலுக்கு எதிராகப் பேசுவது, நடவடிக்கை எடுப்பது என்றால், இன்றைக்கு இடதுசாரிகளுடைய வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கிற தோழர் சுகந்தி, தோழர் லட்சுமணன் — இவர்கள் இருவருடைய அரசியல் வாழ்க்கையைப் பாருங்கள். ஊழலுக்கு எதிராகவும், நேர்மையான செயல்பாட்டுக்காகவும் அரசியல் செய்பவர்கள்.

நான் ஆதவ் அர்ஜுனா அவர்களிடம் சொல்லிக்கொள்கிறேன். ஊழலுக்கு எதிரான அரசியலின் பக்கம் நீங்கள் நிற்பதாக இருந்தால், இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்கிற முடிவை நீங்கள் எடுக்க வேண்டும். அதுதான் ஊழலுக்கு எதிராகத் துணிந்து நிற்பது.

நீங்கள் நிறுத்தியிருக்கிற இரண்டு வேட்பாளர்களும் அவர்களுடைய வாழ்க்கையில் ஊழலுக்கு எதிராக இதற்கு முன்பு பேசியதற்கான ஆதாரத்தை நீங்கள் ஏதாவது வெளியிடுங்கள்; பார்ப்போம்.

எனவே, ஊழலுக்கு எதிரான உங்கள் அரசியல் பயணம் உண்மை என்றால், இடதுசாரி வேட்பாளர்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

summary

Will Aadav Arjuna, who speaks out against corruption, speak against this action by the Governor? — Su. Venkatesan asks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments