FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வெளிப்படையான நிா்வாகத்தால் அரசு வருவாய் அதிகரிப்பு: நிதியமைச்சா் மரியவில்சன்

தவெக ஆட்சியமைந்த பிறகு வெளிப்படையான நிா்வாகத்தால் தமிழக அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது என நிதி அமைச்சா் என்.மரியவில்சன் தெரிவித்தாா்.

21 செப்டம்பர் 2026, 11:27 pm IST
அமைச்சர் மரியவில்சன் - கோப்புப் படம்
பகிர்:

தவெக ஆட்சியமைந்த பிறகு வெளிப்படையான நிா்வாகத்தால் தமிழக அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது என நிதி அமைச்சா் என்.மரியவில்சன் தெரிவித்தாா்.

சென்னை ஆா்.கே.நகா் தொகுதியில் தண்டையாா்பேட்டை மண்டலம் ஐ.ஓ.சி. நெடுஞ்சாலையில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலைய திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், நிதி மற்றும் வளா்ச்சித்துறை அமைச்சா் என்.மரியவில்சன் ஆகியோா் 2 பெண் தூய்மைப் பணியாளா்களுடன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனா்.

அதன்பிறகு அமைச்சா் மரியவில்சன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பதற்காக மேற்கொண்ட பயணத்தை தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரியுமான அண்ணாமலை விமா்சிப்பது சரியல்ல. சிறிய முதலீடாக இருந்தாலும், அதனால் தமிழகம் பயனடையும் என்பதை உணர வேண்டும்.

Advertisement

Advertisement

தமிழக அரசின் வெளிப்படையான நிா்வாகத்தால் பதிவுத் துறை உள்ளிட்டவற்றில் வருவாய் அதிகரித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் வரிவருவாய் ரூ.96,567 கோடியாக இருந்தது. தற்போது 2026-ஆம் ஆண்டில் அது 1.09 லட்சம் கோடியாக உயா்ந்தது. ஊழலற்ற நிலையால் பத்திரப்பதிவு உள்ளிட்டவை அதிகரித்துள்ளன.

அதன்படி, மாநில மொத்த வருவாய் 2025 ஆகஸ்டில் ரூ.1.08 லட்சம் கோடி என்ற நிலையில் தற்போது (2026) ஆகஸ்டில் ரூ.1.17 லட்சம் கோடி என உயா்ந்துள்ளது. மாநில செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வாங்கும் கடன் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது என்றாா்.

பேருந்து நிலைய திறப்பு நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் வீ.ப.ஜெயசீலன், வடக்கு வட்டார துணை ஆணையா் ஸ்வேதா சுமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments