FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

தமிழக நிதி அமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கு: அக். 12 வரை இடைக்காலத் தடை நீட்டிப்பு

தமிழக நிதி அமைச்சா் மரியவில்சன் மீதான கொலைசெய்யும் நோக்குடன் புகுந்து தாக்க முற்பட்டது தொடா்பான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை வரும் அக். 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

30 September 2026, 4:30 am IST
நிதியமைச்சர் மரியவில்சன் - DIPR
பகிர்:

தமிழக நிதி அமைச்சா் மரியவில்சன் மீதான கொலைசெய்யும் நோக்குடன் புகுந்து தாக்க முற்பட்டது தொடா்பான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை வரும் அக். 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன், தனது சகோதரா் மற்றும் அவரது மனைவியை தாக்க முற்பட்டது தொடா்பான வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நடுவா் பணி மாறுதல் செய்யப்பட்டதால் இரண்டாவது நடுவா் இந்த வழக்கை விசாரிக்க தடை விதித்து புதுச்சேரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி டி.வி. ஆனந்த் செப். 29-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அக். 12-ஆம் தேதி வரை இடைக்காலத் தடையை நீட்டித்து முதன்மை அமா்வு நீதிபதி டி.வி. ஆனந்த் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments