FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பிரிட்டன் செல்லாது ஏன்? எம்எல்ஏ கனிமொழி உருக்கம்!

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பிரிட்டன் செல்லாது பற்றி எம்எல்ஏ கனிமொழி சமுக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

22 செப்டம்பர் 2026, 5:10 pm IST
எம்எல்ஏ கனிமொழியுடன் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா
பகிர்:

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பிரிட்டன் செல்லாது பற்றி எம்எல்ஏ கனிமொழி சமுக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் செப். 10 அன்று பிரிட்டன் பயணம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ -ஐ பார்வையிட முடிவு செய்யப்பட்டது. அங்கு நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகரும் ரேஸருமான அஜித்குமார் கலந்துகொண்ட நிலையில், கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

மேலும், தமிழகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் முக்கிய ஒப்பந்தங்கள் பிரிட்டனில் கையெழுத்தானதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

முதல்வரின் பிரிட்டன் பயணத்தில் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆனால், தொழில் முதலீடுகளை ஈர்க்கச் சென்ற வெளிநாட்டுப் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா செல்லாதது அரசியல் தலைவர்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் கீர்த்தனாவுக்கு அந்த நேரத்தில் கழுத்து எழும்பு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், அதனால்தான் அவர் பிரிட்டன் செல்லவில்லை என்றும் அமைச்சர் கனிமொழி இன்று பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் கனிமொழி தனது சமூக ஊடகப் பதிவில், “

ஒரு பெண்ணாக, நான் இதை நேரில் பார்த்ததால் செல்ல விரும்புகிறேன்.

எனது தங்கை அமைச்சர் கீர்த்தனாவுக்கு நடைபெற்ற கழுத்து எலும்பு அறுவை சிகிச்சைக்குப் பின் அவரை காமாட்சி மருத்துவமனையில் சந்தித்தேன். மருத்துவர்கள் அவரை 20 நாள்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், மாநிலத்தின் மீதான அர்ப்பணிப்பு உணர்வால், வெறும் 4 நாள்களில் அவர் பணிக்குத் திரும்பியுள்ளார்.

மருத்துவமனைப் படுக்கையிலும் முதல்வரின் பிரிட்டன் பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து வந்தார். ஒவ்வொரு நாளும் அவருடைய முதல் கேள்வி தனது வலிகளைப் பற்றியது அல்ல; மாறாக தொழில் நிறுவனங்களுடனான சந்திப்புகள் அனைத்து உரிய நேரத்தில் நடக்கின்றனவா என்பது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். அவரிடம் ஓய்வெடுக்கும்படி நான் கூறியபோதும் அவர் கேட்கவில்லை.

அவர் விஷயத்தில் என்னை மிகவும் பாதித்தது இதுதான்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கீர்த்தனாவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறியபோது, எதிர்க்கட்சியினர் அதற்கான காரணத்தையோ, உடல்நலம் தேறுவது அல்லது அவர் எந்தச் சூழலில் இருக்கிறால் என்பதைப் பற்றியோ சிந்திக்கக்கூட இல்லை.

அவர்கள் உடனடியாக ஒரு காரணத்தை மட்டுமே யோசித்தனர். அது மாதவிடாய். ஒரு பெண் பணியில் இல்லையென்றால் அதற்கு மாதவிடாய் மட்டுமே காரணமாக இருக்க முடியும் என நினைக்கும் உடனடியான எதிர்வினை, அப்பெண்ணைப் பற்றியது அல்ல மாறாக அது உங்களின் பிற்போக்குத்தனத்தையே வெளிப்படுத்துகிறது.

பெண்களை அவர்களின் மாதவிடாய் சுழற்சியை வைத்து மட்டுமே வரையறுக்க முடியாது. நாங்கள் தலைவர்கள், தொழில்முறை நிபுணர்கள், தாய்மார்கள் மற்றும் மகள்கள். நோய், காயம் மற்றும் கடமை ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் சுமந்துகொண்டு நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம்.

ஒரு பெண்ணின் பணியில் குறை காண முடியாதபோது, அவரது உடலைக் தாக்குவதற்காக, காரணமின்றி அவர் பணியில் இல்லாத நாள்களை உடலியல் மாற்றங்களுடன் தொடர்புபடுத்திப் பேசுவது மோசமான பழமைவாதிகளின் பழக்கம்.

4 நாள்களுக்குப் பிறகு, உடல்நிலை தேறி வந்தாலும், வலி நிவாரணிகளை உட்கொண்டு, கட்டுப் போட்டிருந்தாலும் இடைவேளையின்றி நிறுவனங்களைச் சந்திப்பதிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதிலும் கீர்த்தனா மும்முரமாக இருந்தார்.

அவரைப் பற்றி தவறாகப் பேசுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலை மாற வேண்டும். கடினமான சூழலில் கூட தொடர்ந்து தலைமை பண்பை கொண்டிருக்கும் பெண்களை நாம் கொண்டாட வேண்டுமே தவிர, அவர்களின் மாதவிடாய் சுழற்சி குறித்து விவாதிக்கக் கூடாது.

பெண்கள் அதைவிடத் தகுதியானவர்கள். தமிழ்நாடும் சிறந்ததையே பெறத் தகுதியானது.

கீர்த்தனா என்னை மன்னித்துவிடுங்கள். இதைத் தனிப்பட்ட விஷயமாகவே வைத்திருக்க நீங்கள் விருப்பப்பட்டது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் இதைப் பதிவிட வேண்டியிருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

MLA Kanimozhi has posted on social media regarding Industries Minister Keerthana not travelling to Britain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments