வி.எஸ். பாபு உடல்நிலை பற்றி கேட்டறிந்தார் முதல்வர் விஜய்!
கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவைச் சந்தித்து முதல்வர் விஜய் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததைப் பற்றி...
கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவைச் சந்தித்து முதல்வர் விஜய் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த செப். 9 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செப். 10 ஆம் தேதி காலை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், பல்துறை நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை நேற்று (செப். 22) வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 14 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவை, தமிழ்நாடு முதல்வரும், தவெக தலைவருமான விஜய் இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார்.
Chief Minister Vijay met Kolathur TVK MLA V.S. Babu and inquired about his health.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.