ஜனநாயகன் கசிவு! கைதான உமாசங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து!
ஜனநாயகன் கசிவு விவகாரத்தில் கைதான உமாசங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது பற்றி...
ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உமாசங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் படம் தணிக்கைக் குழுவின் மறுஆய்வு குழு முன் ஆய்வில் இருந்த போது, இணையதளத்தில் வெளியானது.
பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் ஃப்ரீலான்சிங் எடிட்டரான திருவேற்காட்டைச் சேர்ந்த உமா சங்கர் என்பவர் கைது செய்யபட்டார். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து மாநகர காவல் ஆணையர், ஜூலை 30 ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து உமா சங்கரின் சகோதரி ரேணுகா தேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், தனது சகோதரர் துணிக்கடையில் மேலாளராக பணியாற்றுகிறாரே தவிர, சினிமா எடிட்டர் இல்லை எனவும் மனதை செலுத்தாமல், இயந்திர தனமாக காவல் ஆணையர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதால் உமா சங்கர் மீதான குண்டர் தடுப்பு காவல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் கே. ராஜசேகர் அமர்வு, உமாசங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
'Jananayagan' Leak! Goondas Act invoked against arrested Umasankar revoked!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.