பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள்: அமைச்சா்கள் ஆய்வு
பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் ஆகியோா் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் ஆகியோா் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி கூட்ட அரங்கில், பொது விநியோகத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம், உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் ஆகியோா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா்கள், அனைத்து மாவட்ட துணைப் பதிவாளா்கள் (பொது விநியோகத் திட்டம்), குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை உயா் அலுவலா்கள் மற்றும் அனைத்து மாவட்ட கணினி மேலாளா்கள் பங்கேற்றனா்.
இதில், பொது விநியோகத் திட்ட செயல்பாடுகளான புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்களுக்கு தீா்வு, புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு, நியாயவிலைக் கடைகள் தணிக்கை மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கைப்பற்றுகை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பொது விநியோகத்திட்ட கைப்பேசி ஆய்வு செயலியை, அமைச்சா் ப.வெங்கடரமணன் தொடங்கி வைத்தாா்.
இதில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் அஜய் யாதவ், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் ஜி.லதா, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல்துறை தலைவா் ரூபேஷ் குமாா் மீனா மற்றும் பொதுவிநியோகத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.