FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிறப்புச் சான்றிதழில் உள்ளது போன்று மாணவர்களின் பெயரை பதிவேற்ற வேண்டும்! அரசு தேர்வுகள் துறை

பொதுத்தேர்வுக்கான பெயர் பதிவையொட்டி அரசு தேர்வுகள் துறை அறிவுறுத்தல்...

23 செப்டம்பர் 2026, 11:00 am IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

பொதுத்தேர்வுக்கான பெயர் பதிவையொட்டி பிறப்புச் சான்றிதழில் உள்ளது போன்று மாணவர்களின் பெயரைப் பதிவேற்ற வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு வருகிற 2027 மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் மதிப்பெண் சான்றிதழில் பெயர்களை சரியாக பதிவேற்றம் செய்யும்பொருட்டு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பொதுத்தேர்வையொட்டி மாணவர்கள் பெயர்கள், அவர்களது பிறப்புச் சான்றிதழில் உள்ளது போன்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

பெயருக்கும், இனிஷியலுக்கும் இடையே புள்ளி கூடாது. விவரங்களில் தவறு ஏற்பட்டால் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியரே பொறுப்பு என்றும் அதில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Students names must be registered as they appear on their birth certificates

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments