FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி வாய்ப்பு!

பிறப்புப் பதிவேடுகளில் விடுபட்டுள்ள குழந்தைகளின் பெயரைப் பதிவு செய்வதற்கான அவகாசம் செப். 26 ஆம் தேதியுடன் நிறைவு.

24 செப்டம்பர் 2026, 5:43 pm IST
பிறந்த குழந்தை - கோப்புப் படம்
பகிர்:

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க விரும்புவோர் செப். 26 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்படாது என்றும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பிறப்புப் பதிவு என்பது ஒரு குழந்தையின் முதல் உரிமையாகும். குழந்தையின் சட்டபூர்வ வயது, குடியுரிமை ஆகியவற்றுக்கான அடிப்படை ஆதாரமாக பிறப்புச் சான்றிதழே விளங்குகிறது.

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்தால் மட்டுமே, முழுமையான சான்றிதழாக கருதப்படும். குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க, ஆதார் அட்டை பெற, குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட் மற்றும் விசா உரிமம் பெற, வயது குறித்த ஆதாரம் ஆகிய அனைத்துக்கும் பிறப்புச் சான்று அவசியம்.

Advertisement

Advertisement

பிறப்பு-இறப்பு பதிவுச் சட்டத்தின்படி, குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள் பிறப்பினைப் பதிவு செய்து இலவசமாகச் சான்றிதழ் பெறலாம்.

ஒருவேளை குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால், பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்துப்பூர்வ உறுதிமொழியைச் சம்பந்தப்பட்ட பதிவாளரிடம் அளித்து இலவசமாகப் பெயரைப் பதிவு செய்யலாம். 12 மாதங்களுக்குப் பிறகு, 15 வருடங்களுக்குள் உரிய காலதாமதக் கட்டணமாக ரூ. 200 செலுத்திப் பதிவு செய்யலாம்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் அனுமதியின்படி சிறப்பு சலுகை வழங்கப்பட்டது. அதன்படி, 2010-ஆம் ஆண்டுக்கு முன் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே வகுக்கப்பட்ட 15 ஆண்டுக் கால அவகாசம் முடிவடைந்த அனைத்து பிறப்புப் பதிவுகளுக்கும், வரும் செப்டம்பா் 26- ஆம் தேதி வரை பெயர் பதிவு செய்திட இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு முறை குழந்தையின் பெயரைப் பதிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் அதனை மாற்ற இயலாது. எனவே, பெற்றோர் குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின்னரே சம்பந்தப்பட்ட பதிவாளரை அணுகி உறுதிமொழிப் படிவம் அளித்துப் பதிவு செய்ய வேண்டும்.

இதுபோன்ற கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கப்பட மாட்டாது என்றும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, பெயருடன் கூடிய முழுமையான பிறப்புச் சான்றிதழைப் பெறலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

summary

The Department of Public Health has announced that those wishing to add a name to a birth certificate must register by September 26, and that the deadline for this will not be extended again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments