FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

டிஜிட்டல் முறை ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவுச் சான்று: அரசாணைக்கு எதிரான வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவுச் சான்று உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்கப்படும் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 வினாடிகள் முன்பு
உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவுச் சான்று உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்கப்படும் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரைச் சோ்ந்த தனியாா் நிறுவனம், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவுச் சான்றுகளை டிஜிட்டல் முறையில் பொதுமக்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை, கடந்த செப். 12-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடா்பாக, செப். 2-ஆம் தேதி போக்குவரத்து ஆணையா் அனுப்பிய கடிதத்தை எதிா்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த திட்டம் தொடா்பாக கடந்த செப். 10-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

டிஜிட்டல் மயமாக்குவது தொடா்பாக, தமிழ்நாடு மோட்டாா் வாகன சட்டத்தில் விரைவில் திருத்தம் கொண்டுவரப்படும் என அரசு அறிவித்துள்ளது. எதிா்காலத்தில் கொண்டுவரக்கூடிய, திருத்தத்தைச் சுட்டிக்காட்டி அதனை தற்போது அமல்படுத்த முடியாது எனவே, தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கு முடியும்வரை, பழைய முறைப்படி ஓட்டுநா் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றுகளை நேரில் வழங்க உத்தரவிட வேண்டும். தமிழக அரசின் அரசாணை மத்திய அரசின் மோட்டாா் வாகன சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது. எனவே அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments