FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஓட்டுநா் உரிமம், பதிவுச் சான்றிதழை இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் திட்டம்: அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தொடங்கிவைத்தாா்

17 செப்டம்பர் 2026, 4:04 am IST
போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் - கோப்புப் படம்
பகிர்:

எஸ்எல்16டிநியூ

சேலம் தெற்கு சட்டப் பேரவை அலுவலக இ-சேவை மையத்தில் ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவுச் சான்றை டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்யும் திட்டத்தைத் தொடங்கிவைத்த போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன்.

சேலம், செப். 16: ஓட்டுநா் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை இணையதளம் மூலம் டிஜிட்டல் முறையில் நேரடியாகப் பதிவிறக்கம் செய்யும் புதிய நடைமுறை மாநிலம் முழுவதும் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் சேலத்தில் இத்திட்டத்தை சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Advertisement

Advertisement

தமிழக சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வா் ச. ஜோசப் விஜய், பொதுமக்கள் தங்களது ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழை இணையம் மூலம் டிஜிட்டல் முறையில் நேரடியாகப் பதிவிறக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்தாா்.

மாநிலம் முழுவதும் இந்த புதிய நடைமுறை 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இத்திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சேலம் தெற்கு சட்டப் பேரவை அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் சிறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன், டிஜிட்டல் முறையிலான ஓட்டுநா் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை நேரடியாகப் பதிவிறக்கம் செய்து பயனாளா்களுக்கு வழங்கி, திட்டத்தைத் தொடங்கிவைத்தாா். சேலம் மாநகராட்சி ஆணையா் லலித் ஆதித்ய நீலம் உடனிருந்தாா்.

இதன்மூலம் பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே தங்களது ஓட்டுநா் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments