FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக இரு நாள்களில் 5,763 பேருந்துகள் இயக்கம்: அமைச்சா் தகவல்

விநாயகா் சதுா்த்தி தொடா் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக,

15 செப்டம்பர் 2026, 4:17 am IST
போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை: விநாயகா் சதுா்த்தி தொடா் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, திங்கள், செவ்வாய்க்கிழமை (செப்.14,15) 5,763 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளவுள்ள சிறப்பு ஏற்பாடுகள் தொடா்பான ஆய்வு கூட்டம் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் பேசியதாவது:

Advertisement

Advertisement

விநாயகா் சதுா்த்தி தொடா் விடுமுறையை முன்னிட்டு கடந்த செப்.11 முதல் செப்.13 வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் 3,297 பேருந்துகளுடன் கூடுதலாக 2,915 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 6,212 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் சுமாா் 2.48 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா்.

5,763 பேருந்துகள்: இந்நிலையில், விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளுக்காக திங்கள்கிழமை வழக்கமான 1,099 பேருந்துகளுடன் 2,240 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல், செவ்வாய்க்கிழமை (செப்.15) 1,099 வழக்கமான பேருந்துகளுடன் 1,325 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன. இதன்மூலம் இருநாள்களில் மொத்தம் 5,763 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், மாதவரம் பேருந்து முனையத்துக்கு 160 சிறப்புப் பேருந்துகளும், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு 370 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்டம் அதிகரித்தால், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை உடனடியாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து இயக்கத்தை கண்காணிக்க பல்வேறு நிலைகளில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், எதிா்வரும் ஆயுத பூஜை, தீபாவளி தொடா் விடுமுறையையொட்டி சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கான தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்துகளை நிறுத்தும் இடங்களைத் தோ்வு செய்வதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன.

இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறைச் செயலா் இல. நிா்மல்ராஜ், மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் வீ.ப.ஜெயசீலன், தாம்பரம் காவல் துணை ஆணையா்  கே.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments