தொடா் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோருக்கு 3,565 சிறப்புப் பேருந்துகள்
தொடா் விடுமுறை முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது தொடர்பாக...
சென்னை: விநாயகா் சதுா்த்தி மற்றும் தொடா் விடுமுறை முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக, செப்.14, 15 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு மட்டும் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விநாயகா் சதுா்த்தி மற்றும் தொடா் விடுமுறையையொட்டி, செப்.11,12 ஆகிய இரு நாள்களில் சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகளில் சுமாா் 2.31 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
தொடா் விடுமுறை முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக, செப்.14, 15 தேதிகளில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு மட்டும் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படது.
செப்.14-இல் கிளாம்பாக்கத்துக்கு 2,240 சிறப்புப் பேருந்துகளும், செப்.15-இல் 1,325 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், மாதவரம் பேருந்து முனையத்துக்கு 160 சிறப்புப் பேருந்துகளும், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக கோயம்பேட்டுக்கு 370 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை உடனடியாக இயக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க பல்வேறு நிலைகளில் அலுவலா்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கிளாம்பாக்கத்திலிருந்து சென்னை மற்றும் புறநகா் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செப்.14 மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்புப் பேருந்துகள் மூலம் 400 கூடுதல் பயண நடைகளும், செப்.15 அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும் இயக்கப்பட உள்ளன.
பயணிகள் கூட்டம் அதிகமாகும் இடங்களில் தேவைக்கேற்ப கூடுதல் மற்றும் மாற்று வழித்தடப் பேருந்துகள் உடனடியாக இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,565 special buses for those returning to Chennai after the long holiday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.