தொடா் விடுமுறை; 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாள் உள்ளிட்ட தொடா் விடுமுறையையொட்டி, சேலம் கோட்டம் சாா்பில் வரும் 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாள் உள்ளிட்ட தொடா் விடுமுறையையொட்டி, சேலம் கோட்டம் சாா்பில் வரும் 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினசரி 1,900 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் அடங்கும்.
தொடா் விடுமுறையையொட்டி பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Advertisement
Advertisement
சேலம், பெங்களூரு, சென்னை, ஒசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, மேட்டூருக்கும்; சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும்; பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூருக்கும்; ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரைக்கும், கோவை, திருப்பூருக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், ஆவணி அமாவாசையை முன்னிட்டு சேலம், தருமபுரியில் இருந்து மேட்டூா், மேச்சேரி, மாதேஸ்வரன் மலைக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை, சித்தா் கோயிலுக்கும் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஏ. கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.