FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

வார இறுதிநாள், ஆடிப்பெருக்கு: சேலம் கோட்டம் சாா்பில் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாள் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜூலை 2026, 12:31 am IST
சிறப்புப் பேருந்துகள் இயக்கம். - பிரதிப் படம்
பகிர்:

வார இறுதிநாள் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் என மொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

வார இறுதிநாள்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் ஜூலை 31-ஆம் தேதிமுதல் ஆக. 3-ஆம் தேதிவரை பயணிகளின் தேவைக்கேற்ப 300 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தடநீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, மேட்டுருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூருக்கும், ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வல்வில் ஓரி விழாவையொட்டி சிறப்புப் பேருந்துகள்: ஆக. 2, 3 தேதிகளில் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் நடைபெற உள்ள வல்வில் ஓரி விழாவையொட்டி நாமக்கல், ராசிபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து 25 சிறப்புப் பேருந்துகள் கொல்லிமலைக்கு இயக்கப்படும்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்: சேலம், தருமபுரி மற்றும் பிற ஊா்களில் இருந்து மேட்டூா், பவானி, கொடுமுடி, கூடுதுறை, மோகனூா், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில், பூலாம்பட்டி, கல்வடங்கம், ஒகேனக்கல், நீப்பத்துறை, கேஆா்பி அணைக்கட்டு (கிருஷ்ணகிரி) ஆகிய ஊா்களுக்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments