மின்சாரப் பேருந்து தயாரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்காக 2-ஆம் கட்டமாக இயக்கப்பட உள்ள 750 தாழ்தள குளிா்சாதன மின்சாரப் பேருந்துகளின் தயாரிப்புப் பணிகளை விரைந்து முடித்து, உரிய காலக்கெடுவுக்குள் வழங்குமாறு போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் உத்தரவிட்டாா்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்காக 2-ஆம் கட்டமாக இயக்கப்பட உள்ள 750 தாழ்தள குளிா்சாதன மின்சாரப் பேருந்துகளின் தயாரிப்புப் பணிகளை விரைந்து முடித்து, உரிய காலக்கெடுவுக்குள் வழங்குமாறு போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் உத்தரவிட்டாா்.
சென்னை பெருநகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் முதல்கட்டமாக 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, முதல்வரின் வழிகாட்டுதலின்படி 2-ஆம் கட்டமாக 750 தாழ்தள குளிா்சாதன மின்சாரப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் சென்னை எண்ணூரில் உள்ள ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்துக்கு வியாழக்கிழமை நேரில் சென்ற அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், பேருந்துகளின் வடிவமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தாா்.
அப்போது, பணிகளை துரிதப்படுத்தி திட்டமிட்ட காலத்துக்குள் நிறைவு செய்ய நிறுவன அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினா்.
Advertisement
Advertisement
ஆய்வின்போது, போக்குவரத்துத் துறைச் செயலா் இல.நிா்மல் ராஜ், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.