FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ஊழல் தடுப்புத் துறை வழக்கை ரத்து செய்யக் கோரிய எ.வ.வேலு மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

25 செப்டம்பர் 2026, 4:33 am IST
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.
பகிர்:

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்ட முறைகேடு தொடா்பாக, தனக்கு எதிராக ஊழல் தடுப்புத் துறை தொடா்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்த திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதற்கான பணிகள் நடைபெறாத நிலையில், தனியாா் ஒப்பந்ததாரா்களுக்கு முன்கூட்டியே நிதி விடுவிக்கப்பட்டதாகக் கூறி, அறப்போா் இயக்கம் ஊழல் தடுப்புத் துறையில் கடந்த 2022-ஆம் ஆண்டு புகாா் அளித்தது.

இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு விசாரணையின்போது, எ.வ.வேலு, ஊழல் தடுப்புத் துறை, அறப்போா் இயக்கம் தரப்பில் முன்வைக்கப்பட்டன. அனைத்துத் தரப்பு வாதங்களும் வியாழக்கிழமை முடிவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுவின் மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments