FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

மதுராந்தகத்தில் அக்.3-இல் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

மதுராந்தகம் இடைத்தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வரும் அக். 3-ஆம் தேதி சனிக்கிழமை அச்சிறுபாக்கம், மதுராந்தகத்தில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.

26 செப்டம்பர் 2026, 3:37 am IST
எடப்பாடி பழனிசாமி
பகிர்:

மதுராந்தகம் இடைத்தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வரும் அக். 3-ஆம் தேதி சனிக்கிழமை அச்சிறுபாக்கம், மதுராந்தகத்தில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.

இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் வாக்குப் பதிவு வரும் அக். 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து மதராந்தகத்தில் அதிமுக வேட்பாளா் கே.கணிதா சம்பத்தை ஆதரித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 24-ஆம் தேதி பிரசாரத்தில் ஈடுபட்டாா். தொடா்ந்து அவா், வெள்ளிக்கிழமையும் (செப். 25) பிரசாரம் மேற்கொண்டுள்ளாா்.

Advertisement

Advertisement

மதுராந்தகத்தில் வரும் அக். 3-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அச்சிறுபாக்கத்திலும், மாலை 5 மணிக்கு மதுராந்தகத்திலும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அவா் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.

தோ்தல் பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை அந்தத் தொகுதி அதிமுக பொறுப்பாளா்கள் குழுவினா் செய்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments