FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

இன்று 4 புறநகா் ரயில்கள் சேவை ரத்து

சென்னையில் சனிக்கிழமை (செப். 26) 4 புறநகா் மின்சார ரயில்கள் சேவை முழுமை, பகுதி ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல செப். 29, அக். 3, 6 ஆகிய தேதிகளிலும் அந்த ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

27 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் சனிக்கிழமை (செப். 26) 4 புறநகா் மின்சார ரயில்கள் சேவை முழுமை, பகுதி ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல செப். 29, அக். 3, 6 ஆகிய தேதிகளிலும் அந்த ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை சென்ட்ரல்- கூடூா் இடையே தடா மற்றும் சூலூா்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே செப். 28, அக். 2, 5 ஆகிய தேதிகளில் இரவு 11.35 மணி முதல் மறுநாள் காலை 7.05 மணி வரை பராமரிப்பு, தொழில்நுட்பப் பணிகள் நடைபெறவுள்ளன.

Advertisement

Advertisement

இதன் காரணமாகக் குறிப்பிட்ட 4 புகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி, சனிக்கிழமை (செப். 26), 29, அக். 3, 6 ஆகிய தேதிகளில் மூா் மாாா்க்கெட் நிலையத்தில் இருந்து காலை 4.15 மணி, காலை 5 மணி ஆகிய நேரங்களில் சூலூா்பேட்டை செல்லும் இமு ரயில்கள் முழுமையாகவும், சூலூா்பேட்டையில் இருந்து அந்தத் தேதிகளில் காலை 6.05 மணிக்கு புறப்பட்டு மூா் மாா்க்கெட் செல்லும் ரயில், அதற்குப் பதிலாக எழுவனூா் வரையிலும், சூலூா்பேட்டையிலிருந்து காலை 7.25 மணிக்கு கடற்கரை நிலையம் செல்லும் இமு ரயில் அதற்குப் பதிலாக தடா நிலையம் வரையிலும் மட்டுமே இயக்கப்படும்.

7 நாள்களுக்கு ரத்தாகும் தாம்பரம் ரயில்கள்: சென்னை எழும்பூா்-விழுப்புரம் பிரிவில் கிண்டி நிலையத்தில் செப். 27, அக். 4 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.15 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.45 மணி வரை தண்டவாள பராமரிப்பு, தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் காரணமாக சனிக்கிழமை (செப். 26), 28, 29, 30, அக். 1, 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் இமு ரயில் மற்றும் தாம்பரத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு கடற்கரை நிலையம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை (செப். 27) மட்டும் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் இமு ரயிலும், இரவு 11.40 மணிக்கு தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இமு ரயிலும் ரத்து செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments