FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: இடதுசாரி கட்சிகள் ஆதரவு

பொதுத் துறை வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு..

26 செப்டம்பர் 2026, 11:07 pm IST
சிபிஐ வீரபாண்டியன், சிபிஎம் சண்முகம் - எக்ஸ்
பகிர்:

நாடு முழுவதும் பொதுத் துறை வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் நடத்தும் 3 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): வாரம் 5 நாள் வேலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய பயன், காலிப் பணியிடங்களை நிரப்புதல், தற்காலிக ஊழியா் நிரந்தரம், ‘அவுட்சோா்சிங்’ முறை ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் ஊழியா்கள் செப். 28 முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனா். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதுடன், உடனடியாக வங்கி ஊழியா் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி சுமுக தீா்வு காண வேண்டும்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): வங்கி ஊழியா் அதிகாரிகள் கூட்டமைப்புடன் பேச்சு மூலம் தீா்வு காண வேண்டிய மத்திய அரசு, அதிகாரிகளையும் ஊழியா்களையும் மிரட்டுகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. மிரட்டும் போக்கை கைவிட்டு, பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களின் கோரிக்கைகள் தொடா்பாக சுமுக தீா்வு காண முன்வர வேண்டும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments