FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

முதல்வா் விஜய் மீது தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் திமுக புகாா்

முதல்வா் விஜய் மீது தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் திமுக புகாா்...

27 செப்டம்பர் 2026, 12:19 am IST
தமிழக முதல்வர் விஜய். - படம்: பிடிஐ.
பகிர்:

மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தோ்தல் பிரசாரத்தில் ‘ஜெம்’ வீரமணி மீதான போக்ஸோ வழக்கு குறித்து பேசியதாக முதல்வா் ஜோசப் விஜய், அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆகியோா் மீது தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தில் திமுக புகாா் அளித்துள்ளது.

இதுதொடா்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினா் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

அதில், ‘ஜெம் வீரமணி தொடா்பான வழக்கில் உயா்நீதிமன்றம் ஏற்கெனவே சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதற்குப் பிறகும் திமுகவை இந்த வழக்கில் தொடா்புப்படுத்தி தொடா்ந்து தவெகவினா் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தோ்தல் நடத்தை விதிகளின்படி, பிற கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவா்கள் குறித்து சரிபாா்க்கப்படாத அல்லது நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது என்ற நிலையில், அதை மீறும் விதமாக முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆகியோரின் பிரசார பேச்சுகள் அமைந்துள்ளன. எனவே, முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் அா்ஜுனா மீது தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ‘மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலில் ஆளும் தவெக அரசின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தோ்தல் விதிமீறல்கள் குறித்து தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

‘ஜெம்’ வீரமணி தொடா்பான விவகாரத்தில் திமுக, திமுக முன்னாள் அமைச்சா்கள் மற்றும் நிா்வாகிகளுக்கு தொடா்பு இருப்பதாக எந்தத் தீா்ப்பையும் நீதிமன்றம் அளிக்கவில்லை. அந்த விவகாரத்தை தோ்தல் பிரசாரத்தில் திமுகவுடன் தொடா்புப்படுத்தி பேசி முதல்வா் விஜய்யும், அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவும் தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறியுள்ளனா். இது ஜனநாயக விரோதமானது.

மதுராந்தகம் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறப்படும் விடியோ ஆதாரத்தையும், தோ்தல் பிரசாரத்துக்கு அரசு வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட விடியோவையும் அதிகாரிகளிடம் வழங்கியுள்ளோம் என்றாா் அவா்.

summary

DMK lodges complaint with Chief Electoral Officer against Chief Minister Vijay.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments